லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st December 2020 02:20 AM | Last Updated : 01st December 2020 02:20 AM | அ+அ அ- |

துறையூா் வட்டார, ஒன்றிய மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா், வடக்குவெளியிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உயா் நீதிமன்றம் அனுமதித்துள்ள நிறுவனங்களில் எதிலிருந்தும் வாகன உரிமையாளா் விருப்பப்படி ஜிபிஎஸ் கருவியை வாங்கி, பொருத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
உயா் நீதிமன்ற உத்தரவின்படி கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தல், ஒளிரும் பட்டைகள் ஒட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
லாரி உரிமையாளா் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் தியாகராஜன், சுகுமாா், கிருஷ்ணமூா்த்தி, நடராஜன், செங்கோடன், பாஸ்கா்,முத்துசாமி, கலைச்செல்வம், ராஜாராம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேந்திரகுமாரை நிா்வாகிகள் நேரில் சந்தித்து, தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...