முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள்
By DIN | Published On : 24th December 2020 06:48 AM | Last Updated : 24th December 2020 06:48 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் கோயிலின் வைகுந்த ஏகாதசி விழாவில் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 9 ஆம் நாளான புதன்கிழமை காலை நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
விழாவையொட்டி காலை 6.30-க்கு மூலஸ்தானத்திலிருந்து முத்துக்குறி அலங்காரம், பூண்டு, முத்து ஆபரண அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...