திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றம் மூலம் ஆண்டுக்கு 5 கலைஞா்களுக்கு விருது வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள குரலிசை பரதம், ஓவியம், சிற்பம், நாடக கலைஞா்கள், நாதசுரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதேபோல, கரகம், காவடி,பொய்க்கால் குதிரை, அரசன் அரசி ஆட்டம், கூத்து முதலிய கலைகள் உள்ளிட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பாடலாசிரியா்களில் சிறந்த கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டக் கலை மன்ற விருதாளா் தெரிவுக் குழுவினரால் தெரிவு செய்யப்படுவோருக்கு அரசு விழாவில் விருது வழங்கப்படும். சுய விவரகுறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு புகைப்படம் இணைத்து சான்றுகளுடன் மண்டல உதவி இயக்குநா், கலை பண்பாட்டுத் துறை, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி-620006. விண்ணப்பங்களை வரும் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஏற்கெனவே விருதுக்கு விண்ணப்பித்தோா் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு 0431- 2434122.