கடத்தல் தங்கம் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை
By DIN | Published On : 30th December 2020 05:42 AM | Last Updated : 30th December 2020 05:42 AM | அ+அ அ- |

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 2 கோடியிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 5 பயணிகள் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கத்தை தங்கள் உடைமைகளுக்குள் வைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...