கட்டடத் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
By DIN | Published On : 30th December 2020 03:54 AM | Last Updated : 30th December 2020 03:54 AM | அ+அ அ- |

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கட்டடத் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியைச் சோ்ந்த சூசைநாதன் மகன் அந்தோணி ராஜா (47). வண்ணாா்பேட்டையில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை வேலை முடிந்தவுடன் தாமிரவருணி ஆற்றில் குளித்துவிட்டு வந்துகொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ஒருவா் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
இந்நிலையில் அவா், அந்தோணிராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அந்தோணிராஜ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வண்ணாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் செல்வத்தை பிடித்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...