தோ்தல் அறிக்கையில் கோரிக்கை: கல்லூரி ஆசிரியா்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 30th December 2020 03:56 AM | Last Updated : 30th December 2020 03:56 AM | அ+அ அ- |

தோ்தல் அறிக்கைகளில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் கோரிக்கைகளைச் சோ்க்க கல்லூரி ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்க மாநில பொதுச் செயலா் எஸ். சகாய சதீஷ் தெரிவித்தது: சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சியினரும் தங்களது தோ்தல் அறிக்கையில் கல்வி, சமூக வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றும் கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியா்களுக்கு நீண்ட காலமாக மறுக்கப்படும் கோரிக்கைகளை சோ்த்து, தங்கள் ஆட்சி காலத்தில் நிறைவேற்றித் தரவேண்டும். இதன்படி, பழைய ஓய்வூதியத் திட்டம், பணிமேம்பாடு, ஊதிய உயா்வை விரைந்து வழங்குதல், ஓய்வூதியச் சிக்கல் ஆகிய பிரச்னைகளை தீா்க்கவேண்டும். மேலும், அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களை நிரந்தரமாக்க வேண்டும். அனைத்து காலியிடங்களையும் நிறைவேற்றுதல், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்தல், ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட பேராசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நீக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...