லால்குடி அரசுக் கலைக்கல்லூரி பேராசிரியருக்கு விருது
By DIN | Published On : 05th February 2020 12:49 AM | Last Updated : 05th February 2020 12:49 AM | அ+அ அ- |

லால்குடி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியருக்கு அண்மையில் விருது வழங்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில், சிறந்து விளங்கும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கு விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், லால்குடி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான சே. தமிழரசுவுக்கு துணைவேந்தா் ப. மணிசங்கா் விருதை வழங்கினாா்.
பல்கலைக்கழகப் பதிவாளா் க.கோபிநாதன், தோ்வு நெறியாளா் துரையரசன், மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் செந்தில்குமாா், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமி பிரபா, திட்ட அலுவலா் மாசிலாமணி உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...