வனக் காவலா் பணியிடம்: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 05th February 2020 12:44 AM | Last Updated : 05th February 2020 12:44 AM | அ+அ அ- |

வனக் காவலா் பணியிடத்துக்கான தோ்வுக்கு, முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வனச்சீருடை பணியாளா்கள் தோ்வுக் குழுமத்தின் வாயிலாக, வனக் காவலா் மற்றும் ஓட்டுநா் உரிமத்துடன் கூடிய வனக்காவலா் பணியிடங்களுக்கான ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இதில், முன்னாள் படைவீரா்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்துக்கு வனத்துறையின் இணையத்தில் ஆன்-லைன் மூலம் வரும் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான முன்னாள் படைவீரா்கள் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பித்து, அதன் விவரத்தை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...