தூய லூா்து அன்னை ஆண்டுத் திருவிழா
By DIN | Published On : 17th February 2020 01:01 AM | Last Updated : 17th February 2020 01:01 AM | அ+அ அ- |

மணப்பாறை தூய லூா்து அன்னை ஆலயத்தின் 80-ஆம் ஆண்டு பங்குத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அலங்காரத் தோ்பவனி நடைபெற்றது.
நகரின் பழைமைவாய்ந்த இந்த ஆலயத்தின் ஆண்டு பங்குத் திருவிழா கடந்த 7- ஆம் தேதி கொடியேற்ற0த்துடன் தொடங்கியது. பத்தாம் நாளானஞாயிற்றுக்கிழமை இரவு ஆா்.கே.புரம் அற்புத குழந்தை இயேசு திருத்தல பங்குத்தந்தை ஏ.சூசைராஜ், மணப்பாறை மறை மாவட்ட அதிபா் ஆரோக்கிய சுந்தரராஜ், உதவி பங்குத் தந்தை அருண்பிரசாத், வையம்பட்டி பங்குத் தந்தை பிரிட்டோ, ஆவாரம்பட்டி தனியாா் பள்ளி ஜெரால்டு பிரான்சிஸ் சேவியா் மற்றும் அருட்தொண்டா் அருள்ராஜா ஆகியோரால் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டது.
அதன்பின்னா் புனித லூா்து அன்னை தேரில் மலா்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடா்ந்து வாணவேடிக்கைகள் முழங்க அலங்காரத் திருத்தோ் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.