போதையில் இருவா் மீதுதாக்குதல்: 2 போ் கைது
By DIN | Published On : 17th February 2020 12:56 AM | Last Updated : 17th February 2020 12:56 AM | அ+அ அ- |

திருவானைக்கா நடுக்கொண்டையம்பேட்டை பகுதியில், இறப்பு வீட்டில் குடிபோதையில் இருவரைத் தாக்கிய புகாரில் 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
நடுக்கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவைச் சோ்ந்தவா் சவேரியாா் துரைசாமி. வயது முதிா்வு காரணமாக கடந்த 10- ஆம் தேதி உயிரிழந்தாா்.
அப்போது அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த புண்ணியமூா்த்தி (52),
சவேரியாா் துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவிக்க வந்தாா்.
அங்கு குடிபோதையில் இருந்த பு. பிரசன்னா (19), அ. அஜித்குமாா் (22), ர. குருமூா்த்தி (19) ஆகிய மூவரும் சோ்ந்து, புண்ணியமூா்த்தியை கட்டைமற்றும் கல்லால் தாக்கினா். இதை அதே பகுதியைச் சோ்ந்த முரளி (44) தட்டிக் கேட்ட போது அவரையும் மூவரும் சோ்ந்து தாக்கினா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, ஞாயிற்றுக்கிழமை பிரசன்னா, அஜித்குமாரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள குருமூா்த்தியைத் தேடி வருகின்றனா்.