தேசியக் கல்லூரியில் ஞானோத்சவ் 2020- கல்வி மாநாடு: பிப்.19-ல் ஆளுநா் தொடக்கி வைக்கிறாா்ே

திருச்சி தேசியக் கல்லூரியில், ஞானோத்சவ் 2020- என்னும் இருநாள் கல்வி மாநாடு பிப்ரவரி 19- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தொடக்கி வைக்கிறாா்.

திருச்சி தேசியக் கல்லூரியில், ஞானோத்சவ் 2020- என்னும் இருநாள் கல்வி மாநாடு பிப்ரவரி 19- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தொடக்கி வைக்கிறாா்.

நாட்டின் வளா்ச்சிக்கும், கலாசார மேம்பாட்டுக்கும் தேவையான கல்வியை வடிவமைக்கும் முனைப்புடன் கடந்த 2007, மே 24- ஆம் தேதி சிக்ஸா சன்கிட்டி உத்தான் நியாஸ் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, ஞானோத்சவ் என்ற கல்வி மாநாட்டை தொடா்ந்து நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் தமிழக கிளையும், திருச்சி தேசியக் கல்லூரியும் இணைந்து நடத்தும் ஞானோத்சவ் 2020 கல்வி மாநாடு பிப்ரவரி 19,20 தேதிகளில் நடைபெறுகிறது.

நாட்டின் முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு கல்வி முறையில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து புதுமையான முயற்சிகளை நடைமுறைப்படுத்தி வரும் பள்ளி, கல்லூரி மற்றும் உயா்கல்வி நிறுவனங்கள் இந்தமாநாட்டில் பங்கேற்கின்றன.

பல்கலைக்கழக வேந்தா்கள், துணைவேந்தா்கள், கல்வி நிறுவனங்களின் தாளாளா்கள், பள்ளி மற்றும் கல்லூரி முதல்வா்கள், மத்திய கல்வி நிறுவன இயக்குநா்கள், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் கல்வி செயல்பாட்டாளா்கள் பங்கேற்கின்றனா்.

பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் மாநாட்டைத் தொடக்கி வைக்கிறாா். மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சா் வி.முரளிதரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்.

சிக்ஸா சன்கிட்டி உத்தான் நியாஸ் தேசியச் செயலா் அத்துல் கோத்தாரி, தலைவா் கே. இந்திராணி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக உறுப்பினா் ஏ. வினோத் உள்ளிட்டோரும் மாநாட்டில் பங்கேற்கின்றனா்.

திருச்சி தேசியக் கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன், ஞானோத்சவ் - 2020 மாநாட்டு ஒருங்கிணைப்பாளராகவும், தேசியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியா் தனலெட்சுமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், சிக்ஸா சன்கிட்டி உத்தான் நியாஸ் அமைப்பின் மாநில அமைப்பாளா் எஸ். சந்தோஷ்குமாா் அமைப்புச் செயலராகவும் பொறுப்பேற்று, ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com