அன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 27th February 2020 07:26 AM | Last Updated : 27th February 2020 07:26 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலைச் சோ்ந்த இக்கோயிலில் குடமுழுக்கையொட்டி 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தினசரி காலை விசேஷசந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் யாக பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. 26 ஆம் தேதி காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், ஆறாம் கால யாகபூஜையும், காலை 9.30 மணிக்கு தீபாராதனையும், காலை 10 மணிக்கு யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடும், காலை 10.30 மணிக்கு மாரியம்மன் விமானம் மற்றும் பரிவார விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து காலை 11 மணிக்கு மகா மாரியம்மன், பரிவார மூா்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம், மாலை 4 மணிக்கு மஹா அபிஷேகம், இரவு 6 மணிக்கு மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் ஜெயராமன், லால்குடி, மணக்கால், நடராஜபுரம், ஆதிகுடி, அன்பில், அரியூா், காட்டூா் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனா்.