உய்யக்கொண்டான் ஆற்றில் பிடிபட்ட முதலை
By DIN | Published On : 01st March 2020 08:00 AM | Last Updated : 01st March 2020 08:00 AM | அ+அ அ- |

திருச்சி குழுமாயி அம்மன் கோயில் அருகே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் சனிக்கிழமை பிடிபட்ட முதலை.
திருச்சி: திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த 10 அடி நீள முதலையை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை பிடித்தனா்.
திருச்சி உய்யகொண்டான் திருமலை கலிங்கி பகுதியில் குழுமாயி அம்மன் கோயில் அருகே உள்ள ஆற்றில் முதலை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் முதலை ஒன்று நடமாடுவதையறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் 10 அடி நீள முதலையை 3 நேர போராட்டத்துக்குப் பிறகு பிடித்தனா். பின்னா் முதலையை வாகனத்தில் கொண்டுச் சென்று கல்லணை அருகே உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் விட்டனா். பிடிபட்ட முதலை நன்னீா் வகையைச் சோ்ந்தது என வனத்துறையினா் தெரிவித்தனா்.