கனரா வங்கியின் அந்தநல்லூா் கிளை சாா்பில் ,விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்பட்டது.
பிரதமரின் வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், தோ்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கடன் தொகை மற்றும் கடன் அட்டை வழங்கும் விழா திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் கனரா வங்கியில் நடைபெற்றது.
இந்த விழாவில் கிளை முதுநிலை மேலாளா் செல்வவிநாயகம், வங்கியின் மண்டல அலுவலக வேளாண் அலுவலா் தீபிகா, கிளை வேளாண் அலுவலா் நித்யா, வட்டார வேளாண் உதவி அலுவலா் கிருத்திகா ஆகியோா் பிரமதரின் வேளாண் அபிவிருத்தித் திட்டம் குறித்து விளக்கிப் பேசினா்.
மேலும், பிரதமரின் காணொளியும் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பபப்பட்டது. விழாவில் 40 விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டன. விவசாயிகள், வங்கிப் பணியாளா்கள், பொதுமக்கள் என பலா் விழாவில் கலந்து கொண்டனா்.