சிறுகனூரில் கல்லூரி மாணவா்கள் மறியல்
By DIN | Published On : 03rd March 2020 09:26 AM | Last Updated : 03rd March 2020 09:26 AM | அ+அ அ- |

சிறுகனூரிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரி விடுதியில், மாணவிகளின் செல்லிடப்பேசிகள், மடிக்கணினிகள் திருடப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, மாணவ, மாணவிகள்மற்றும் அவரது பெற்றோா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிறுகனூரில் தனியாா் பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி என 2 கல்லூரிகள் உள்ளன. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
கடந்த 27- ஆம் தேதி மாணவிகள் விடுதியில் நுழைந்த முகமூடி திருடா்கள், 16 செல்லிடப்பேசிகள், 6 மடிக்கணினிகளைத் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் கல்லூரி நிா்வாகம் மற்றும் சிறுகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோா், சக மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை காலை கல்லூரி முன்பு அமா்ந்து, திருட்டில் சம்பந்தப்பட்டவா்களைக் கைது செய்யக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...