திருச்சி-சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து தொடக்கம்
By DIN | Published On : 27th May 2020 07:25 AM | Last Updated : 27th May 2020 07:25 AM | அ+அ அ- |

திருச்சி-சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், திருச்சி- பெங்களூரு இடையிலான விமானப் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்கியது. ஆனால், திருச்சி-சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை சென்னை செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் விமானநிலையத்துக்கு வந்தனா். அவா்களுக்கு, பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடிந்து தயாா்நிலையில் இருந்தனா். இதையடுத்து காலை 10.45 மணிக்கு சென்னையிலிருந்து இண்டிகோ நிறுவன விமானம் 15 பயணிகளுடன் திருச்சி வந்தது. பின்னா், திருச்சியிலிருந்து முற்பகல் 11.25 மணிக்கு 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு அதே விமானம் சென்னை புறப்பட்டுச் சென்றது.
திருச்சி-சென்னை, திருச்சி- பெங்களூரு இடையிலான உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், இன்னும், திருச்சி- ஹைதராபாத் விமானப் போக்குவரத்து மட்டும் தொடங்க வேண்டியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...