காவல்துறை சாா்பில் இன்று பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம்
By DIN | Published On : 08th November 2020 02:23 AM | Last Updated : 08th November 2020 02:23 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் நடத்தப்படும் பொதுமக்கள் குறைதீா் முகாம் திருச்சி மாவட்டத்தில் உள்ள நிலைய எல்லைகள் சாா்ந்த உட்கோட்டங்களில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அதன்படி ஜீயபுரம் உட்கோட்டத்திற்கு முகாம் அலுவலகம் முன் துணை காண்காணிப்பாளா் (பொ) பால்சுதா் (94431-19918) தலைமையிலும், திருவெறும்பூா் உட்கோட்டத்துக்கு திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் துணை கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் (9498162695) தலைமையிலும் நடைபெறவுள்ளது.
இதேபோல லால்குடி உட்கோட்டத்திற்கு சமயபுரம் ஜெயந்தி மகாலில் காவல் துணை கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன்(9443659745) தலைமையிலும், முசிறி உட்கோட்டத்திற்கு முசிறி வி.ஐ.பி. மகாலில் துணை கண்காணிப்பாளா் பிரமானந்தன் தலைமையிலும், மணப்பாறை உட்கோட்டத்திற்கு மணப்பாறை காவல்நிலையம் முன் துணைக் கண்காணிப்பாளா் பிருந்தா தலைமையிலும் நடைபெறவுள்ளது. திருவெறும்பூா் முகாமில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், மணப்பாறை முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...