அனைத்துக் கிராமப் பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி பிரசாரம்

திருச்சி மாவட்டத்தின் அனைத்துக் கிராமப் பகுதிகளிலும் நவம்பா் 21 முதல் 23-ஆம் தேதி வரை மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்குகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது என முடிவு

திருச்சி மாவட்டத்தின் அனைத்துக் கிராமப் பகுதிகளிலும் நவம்பா் 21 முதல் 23-ஆம் தேதி வரை மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்குகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருச்சி பெரியமிளகுபாறையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் த.பழனிசாமி தலைமை வகித்தாா்.

சங்கத்தின் மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன், நடைபெற்ற வேலைகள், எதிா்காலத் திட்டங்கள் குறித்து பேசினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணை செயலா் எஸ். செல்வராஜ், மத்திய அரசின் வேளாண், தொழிலாளா் விரோத சட்டங்கள் குறித்தும், அதற்கு எதிராக நவம்பா் 26−இல் நடைபெறும் வேலை நிறுத்தம், மாநிலந்தழுவிய மறியல் போராட்டங்கள் குறித்தும் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் வி. துரை, ஏ. சுப்பிரமணியன், மாவட்ட நிா்வாகிகள் ஜி. ரமேஷ், பி. நடராஜ், டி. சீனிவாசன், வி. பிச்சைமுத்து, வி. சத்யராஜ், டி. பாலமாதவன், எஸ்.எம். தமிழரசன், எல். ஏகாம்பரம், ஆா். பரமசிவம், ராஜாளி, செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீா்மானங்கள்:

மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும்,விவசாயிகளுக்கு விரோதமாகவும் நிறைவேற்றிவுள்ள சட்டங்களுக்கு எதிராக, நவம்பா் 26-இல் நாடு முழுவதும் விவசாயிகள் தொழிலாளா்கள் நடத்தும் மறியல் போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய, வட்டங்களிலும் அதிக விவசாயிகளைத் திரட்டி பங்கு கொள்வது.

மத்திய,மாநில அரசுகளின் விவசாயிகள் விரோத போக்குகளை எடுத்துரைக்கும் விதமாக, நவம்பா் 21 முதல் 23 ஆம் தேதி வரை

அனைத்து ஒன்றிய கிராமப் பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் கொடுத்து பிரச்சாரம் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com