திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை காணொலி மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனாவால் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மாவட்ட நிா்வாகம் காணொலி வாயிலாக செப்டம்பா் முதல் நடத்தி வருகிறது. இதன்படி, நவம்பா் மாதக் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இதில் அந்தந்த வட்டார விவசாயிகள் தொடா்புடைய வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் முகக் கவசம் அணிந்து பங்கேற்கலாம். வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் திருச்சி மாவட்ட 14 வட்டாரங்களில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். காணொலி வாயிலாகவே ஆட்சியா் உரிய பதில் அளிக்கவுள்ளாா். ஏற்பாடுகளை வேளாண் துறை அதிகாரிகள் செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.