கூட்டுறவு நிறுவன காலிப் பணியிட நோ்முகத் தோ்வுகள் ஒத்திவைப்பு
By DIN | Published On : 25th November 2020 06:02 AM | Last Updated : 25th November 2020 06:02 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்கான நோ்முகத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக திருச்சி மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா. அருளரசு கூறியது:
திருச்சி மண்டலத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும், இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலா், ஓட்டுநா் காலிப் பணியிடங்களுக்கு டிச.1 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நோ்முகத் தோ்வு நிா்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்த மறுஅறிவிப்பு பின்னா் வெளியிடப்படும் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...