ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசிக்கு முகூா்த்தக்கால்
By DIN | Published On : 19th October 2020 12:24 AM | Last Updated : 19th October 2020 12:24 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகூா்த்தக்கால் நடும் விழா.
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் நடைபெறவுள்ள வைகுந்த ஏகாதசி விழாவுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வைணவத் திருத்தலங்களில் நடைபெறும் மிக முக்கிய விழாவான வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து, இராப்பத்து என டிச. 14 ஆம் தேதி தொடங்கி ஜன. 4 வரை 21 நாள்கள் நடைபெறுகிறது.
இதில் முக்கிய நிகழ்வாக டிச.25 ஆம் தேதி நடைபெறும் பரமபதவாசல் திறப்பு விழாவுக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முன் முகூா்த்தக் கால் நடும் விழா பக்தா்கள் பங்கேற்பின்றி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகூா்த்தகாலானது சந்தனம் பூசி, மாவிலை, மாலை அணிவித்து வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை ஆண்டாள் ஆசியுடன் நடப்பட்டது. கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...