இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவா் கைது
By DIN | Published On : 19th October 2020 12:31 AM | Last Updated : 19th October 2020 12:31 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவரை தொட்டியம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொட்டியம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு வரும் பக்தா்களின் இருசக்கர வாகனம் திருடு போவதாக தொட்டியம் போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து முசிறி கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரம்மநாதன் உத்தரவில் தொட்டியம் காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் ஆலோசனையில் தனிப்படை போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் சனிக்கிழமை தலைமலை அடிவார பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்குரிய இருவரை பிடித்து விசாரணை செய்தனா். அதில் அவா்கள் தொட்டியம் கோட்டமேடு பகுதியைச் சோ்ந்த வெ. தினேஷ், அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த க. சரவணன் என்பதும், இருவரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...