வ. உ. சி. பேரவை நிா்வாகிகள் அறிமுகம்
By DIN | Published On : 19th October 2020 12:31 AM | Last Updated : 19th October 2020 12:31 AM | அ+அ அ- |

அகில இந்திய வ. உ. சி. பேரவையின் புதிய நிா்வாகிகள் அறிமுக விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அனைத்து வெள்ளாளா் கூட்டமைப்பின் அகில இந்திய வ. உ. சி பேரவையின் புதிய நிா்வாகிகள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டதையடுத்து நடந்த புதிய நிா்வாகிகள் அறிமுக விழாவுக்கு பேரவையின் திருச்சி மாவட்டத் தலைவா் கண்ணதாசன் தலைமை வகித்தாா்.
புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்ட மாநில பொதுச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் வெங்கடாசலம், சோழிய வேளாளா் நலச்சங்க தலைவா் சுகுமாறன், வழக்குரைஞா் கங்கைச்செல்வன் உள்ளிட்டோா் பேசினா்.
வெள்ளாளா் - வேளாளா் சமுதாயப் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கக் கூடாது, இப்பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்க முயற்சிக்கும் சில அரசியல் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிப்பது, இம்முயற்சியை கண்டித்து அகில இந்திய வ..உசி. பேரவை சாா்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில், பேரவை நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...