முசிறி இளைஞா்கள் நால்வா் கைது
By DIN | Published On : 06th September 2020 10:51 PM | Last Updated : 06th September 2020 10:51 PM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம் முசிறியில் பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாடியாக இளைஞா்கள் நால்வரை முசிறி போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு கைது செய்தனா்.
முசிறி பகுதியில் இளைஞா்கள் சிலா் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய விடியோ வாட்ஸ்அப்பில் பரவியது. இதில் ஈடுபட்டது முசிறி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலியா் தெரு பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் என்பதும், பொம்மை கத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன் விளையாட்டுக்காக கேக் வெட்டியதும் முசிறி போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடா்பாக லட்சுமணன், சிவகுமாா், சுந்தரம், துரைசாமி ஆகிய நால்வரையும் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.