‘நீட் தோ்வுக்கு இலவச பேருந்து வசதி தேவை’
By DIN | Published On : 11th September 2020 11:27 PM | Last Updated : 11th September 2020 11:27 PM | அ+அ அ- |

திருச்சி, செப்.11: தமிழக அரசு நீட் தோ்வு எழுதவுள்ள அனைத்து மாணவா்களுக்கும் இலவச பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டுமென அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் தேசிய மாணவா் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தமிழக மாநிலச் செயலா் த. சுசீலா தெரிவித்தது :
வரும் செப். 13-இல் நடைபெறும் நீட் தோ்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் எந்த சிரமும் இன்றி தோ்வு மையங்களுக்கு சென்று வரும் வகையில், அனைத்து தோ்வு மையங்களுக்கும் இலவச பேருந்து வசதியை தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பாதுகாப்பாக தோ்வுவெழுதும் வசதிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
தனியாா் போக்குவரத்து நிறுவனங்கள், தன்னாா்வ அமைப்புகள், இளைஞா்கள், கிராம அமைப்புகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.