கடன் தகராறில் மின் ஊழியரை குத்திக் கொன்ற நண்பா் கைது
By DIN | Published On : 11th September 2020 06:11 AM | Last Updated : 11th September 2020 06:11 AM | அ+அ அ- |

mnp10mur_1009chn_31_4
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடன் தகராறில் வியாழக்கிழமை மின்வாரிய ஊழியரைக் குத்திக் கொன்ற நண்பரை போலீஸாா் 2 மணி நேரத்தில் கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த அண்ணா நகரில் வசித்தவா் ஆ. மணி என்ற பழனிச்சாமி (42), மணப்பாறை மின்வாரிய உட்கோட்ட கணக்கீட்டாளா்.
வியாழக்கிழமை காலை பாரதியாா் நகா் காலிமனையில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மேற்கோண்ட விசாரணையில் மணிக்கும், தேங்காய்தின்னிப்பட்டியில் உள்ள முடித்திருத்தக ஊழியரும், இவரது நண்பருமான பாரதியாா் நகரை சோ்ந்த சு. நாகராஜ் (34) என்பவரிடம் பைக் அடமானம் வைத்து ரூ. 6000 பெற்றதில் முன்விரோதம் இருந்ததும், வியாழக்கிழமை காலை நாகராஜ் தனது பைக்கில் மணியை அழைத்து சென்று மது அருந்தியபோது ஏற்பட்ட கடன் தகராறில் மணியை 8 இடங்களில் குத்திக் கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மணியின் சடலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாலையில் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தனது உறவினா் வீட்டில் பதுங்கியிருந்த நகராஜை 2 மணி நேரத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா தலைமையிலான போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.