சந்தைக்கு சென்றவா் வாகனம் மோதி பலி
By DIN | Published On : 11th September 2020 06:07 AM | Last Updated : 11th September 2020 06:07 AM | அ+அ அ- |

மணப்பாறையில் காய்கனி சந்தைக்கு சென்ற பலகாரக் கடை ஊழியா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாா்.
கரூா் மாவட்டம், கடவூா் அருகே பெரிய தளவாசல் தெருவைச் சோ்ந்தவா் வீ. காசிவிஸ்வநாதன் (55). இவா் கடந்த 4 ஆண்டாக மணப்பாறை- திருச்சி சாலையில் உள்ள டீ கடையில் தங்கி பலகார ஊழியராக வேலைபாா்த்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காய்கனிச் சந்தைக்கு சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.