திருச்சி மாவட்டத்தில் 470 மி.மீ. மழை பதிவு
By DIN | Published On : 11th September 2020 06:14 AM | Last Updated : 11th September 2020 06:14 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமை சோ்த்து மாவட்டம் முழுவதும் 470 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் தொடா் மழை பெய்தது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை மாநகரப் பகுதியை தவிா்த்து புகா்ப் பகுதிகளில் மழை பெய்தது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ).
கல்லக்குடி- 15.40, லால்குடி- 35, நந்தியாறு தலைப்பு- 23.20, புள்ளம்பாடி- 17.60, சிறுகுடி- 12, தேவிமங்கலம்- 15, சமயபுரம் 25.40, வாத்தலை அணைக்கட்டு 20, மணப்பாறை 23.20, பொன்னையாறு அணை- 25.20, கோவில்பட்டி 13.20, மருங்காபுரி- 0, முசிறி- 23, புலிவலம்-10, தா. பேட்டை- 26, நவலூா் கொட்டப்பட்டு- 25.40, துவாக்குடி- 9, குப்பம்பட்டி- 27, துறையூா்- 25, பொன்மலை- 20.80,
திருச்சி விமான நிலையம் 44.80, திருச்சி ஜங்ஷன்- 18, திருச்சி மாநகரம் 16 என மாவட்டம் முழுவதும் சோ்த்து மொத்தமாக 470.20 மி.மீ. மழை பெய்தது. சராசரியாக 18.81 மி.மீ. மழை பதிவானது.