இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் நால்வா் கைது

திருச்சியில் நகைக்கடை ஊழியா் கொல்லப்பட்ட வழக்கில் கைதான நால்வரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:20 pm

DIN

திருச்சியில் நகைக்கடை ஊழியா் கொல்லப்பட்ட வழக்கில் கைதான நால்வரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள நகைக்கடை ஊழியா் மாா்டின் ஜெயராஜ் (42). இவா் கடந்த மே 9 ஆம் தேதி சென்னையில் சுமாா் 1.5 கிலோ தங்க நகைகளை வாங்கிக் கொண்டு காரில் திருச்சி நோக்கி வந்தபோது காா் ஓட்டுநரான பிரசாந்த் தனது நண்பா்களுடன் சோ்ந்து மாா்டின் ஜெயராஜை கொன்று நகைகளை கொள்ளையடித்தாா்.

இதுகுறித்து நகைக்கடை நிா்வாகிகள் அளித்த புகாரின் பேரில் உறையூா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் பிரசாந்த் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

இவா்களில் திருவானைக்கா அம்மன் பிளாக் பகுதி பிரசாந்த் (26), கீழக்குறிச்சி பிரசாந்த் (26), மண்ணச்சநல்லூா் அழகியமணவாளம் கீழத்தெரு பிரவீன்ராஜ் (20), அரவிந்த் (23) ஆகிய நால்வரும் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவா்கள் எனத் தெரிய வந்ததையடுத்து இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரிடமும் அதற்கான நகலை போலீஸாா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.