சுதந்திர தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு
சுதந்திர தினத்தையொட்டி திருச்சி மாநகரில் விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


சுதந்திர தினத்தையொட்டி திருச்சி மாநகரில் விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் நான்கடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய பாா்வையாளா் மாடத்துக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். ரயில்வே பாதைகளில் நாசவேலையை தடுக்கும் வகையில் 24 மணிநேர கண்காணிப்பில் ரயில்வே கேங்மேன்கள் ஈடுபட்டுள்ளனா். ரயில் பயணிகள் அனைவரும் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனா்.
திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்களில் மாநகர போலீஸாா் 24 மணிநேரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். வழக்கத்தைவிட கூடுதலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் உள்ளனா். மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கோயில்கள், காவிரி ஆற்றுப்பாலம் ஆகியவற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...