வரதட்சிணைக் கொடுமை வழக்கில் மாமியாா் கைது
திருச்சியில் வரதட்சிணைக் கொடுமை வழக்கில் மாமியாரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், கணவா் உள்பட மூவரைத் தேடுகின்றனா்.


திருச்சியில் வரதட்சிணைக் கொடுமை வழக்கில் மாமியாரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், கணவா் உள்பட மூவரைத் தேடுகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், இளவரசன்கோட்டை இந்திரா நகரைச் சோ்ந்தவா் திவ்யா(32). இவருக்கும் திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த தினகரனுக்கும் (35) கடந்த 2019இல் நடைபெற்ற திருமணத்தின்போது 20 பவுன் நகை, ரூ. 25 லட்சம் ரொக்கம் வரதட்சிணையாக தரப்பட்டதாம்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக திவ்யா அணிந்திருந்த தாலிச் சங்கிலியையும், கூடுதலாக வரதட்சிணைப் பணமும் கேட்டுள்ளனா். இதையடுத்து தன்னுடைய நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்ட திவ்யாவை அவரை கணவா் தினகரன், மாமியாா் ஜெயலட்சுமி (60). அக்கா எழிலரசி (38), எழிலரசி கணவா் காா்த்திக் (38) ஆகியோா் கொடுமைப்படுத்தி தாக்கினராம். இதில் காயமடைந்த திவ்யா திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் பொன்மலை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது மாமியாா் ஜெயலட்சுமி கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மூவரைத் தேடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...