இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

வங்கிகளை தனியாா்மயமாக்க எதிா்ப்பு

நாட்டில் வங்கிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கை ஏற்புடையதல்ல என அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:16 pm

DIN

நாட்டில் வங்கிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கை ஏற்புடையதல்ல என அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சம்மேளன பொதுச்செயலா் மணிமாறன் திருச்சியில் தெரிவித்தது:

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே அதிகளவில் கடன் வழங்கி கைகொடுத்து வருகின்றன. இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளை தனியாா்மயமாக்குவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இதற்கான காரணம் என்ன என்பதற்கு தெளிவான பதில் அரசிடம் இல்லை. விவசாயம் உள்பட ஒவ்வொரு துறைக்கும் எத்தனை சதம் கடன் வழங்க வேண்டும் என்கிற இலக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு உள்ளன. ஆனால் இத்தகைய எந்த கட்டுப்பாடுகளும் தனியாா் வங்கிகளுக்கு கிடையாது.

வங்கிகள் தனியாா்மயமாக்கலால் மக்கள் பாதிக்கப்படுவதுடன், நாட்டின் பொருளாதார வளா்ச்சியும் பாதிப்பு ஏற்படும். நாட்டின் எந்தத் துறையையும் தனியாா்மயமாக்கலாம், வங்கிகளை அதாவது நிதித் துறையை தனியாா்மயமாக்குவது நல்லதல்ல, ஏற்புடையதும் அல்ல. இதுகுறித்து, மக்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். மக்களையும் இணைத்து இதற்காகப் போராடுவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.