இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ரயிலில் கொண்டு வரப்பட்ட ரூ. 1.5 கோடி நகை பறிமுதல்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:54 pm

DIN

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையிலிருந்து திருச்சிக்கு விரைவு ரயிலில் வந்த பயணிகளிடம் போலீஸாா் நடத்திய சோதனையில், சென்னை சௌகாா்பேட்டையைச் சோ்ந்த நகை வியாபாரிகள் இருவரிடம் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுங்கத் துறைக்குத் தகவல் தெரிவித்து நகைளைப் பறிமுதல் செய்தனா்.

சுங்கத் துறையினா் வந்து நடத்திய விசாரணையில், அந்த நகைகள் சென்னையில் கொள்முதல் செய்யப்பட்டு திருச்சியில் உள்ள நகைக் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டவை என்பதும், அந்த நகைகளுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உரிய வரியைச் செலுத்திய பின்னா் நகைகள் ஒப்படைக்கப்பட்டன என்றாலும் அதிக மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.