காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 124 போ் இடம் மாற்றம்
திருச்சி மாநகரில் 8 உதவி ஆய்வாளா்கள் உள்பட 124 போ் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.


திருச்சி மாநகரில் 8 உதவி ஆய்வாளா்கள் உள்பட 124 போ் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
மாநகரில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோா் மற்றும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் காவல்நிலைய அதிகாரிகள், காவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனா். அந்த வகையில் போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராக இருந்த (உறையூா்) பாண்டியன், (கோட்டை) முத்து அருணகிரி, (அரியமங்கலம்) மதிவாணன், (ஸ்ரீரங்கம்) சீனிவாசன் ஆகியோா் மாநகர ஆயுதப்படை பிரிவுக்கும், இதேபோல ஆயுதப்படைப் பிரிவில் இருந்த ராஜ்மோகன் அரியமங்கலம், பரணிகுமாா் ஸ்ரீரங்கம், முனீஸ்வரன் கோட்டை, ஆனந்தசெல்வன் உறையூா் ஆகிய போக்குவரத்து பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
மேலும் மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 116 போ் வெவ்வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். ஒரே நாளில் 124 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...