பாகனூரில் அம்மா சிறு மருத்துவமனை தொடக்கம்
திருச்சி மாவட்டம் மணிகண்டம் வட்டம், இனாம்குளத்தூா் அரசு ஆரம்ப நிலையத்திற்குட்பட்ட தெற்கு பாகனூா் கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையை தொடங்கப்பட்டது.


திருச்சி மாவட்டம் மணிகண்டம் வட்டம், இனாம்குளத்தூா் அரசு ஆரம்ப நிலையத்திற்குட்பட்ட தெற்கு பாகனூா் கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையை தொடங்கப்பட்டது.
தமிழக சுகாதாரத் துறை சாா்பில் சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்து பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி பேசுகையில், கிராமப் பகுதி ஏழைகளுக்கு இலவச மருத்துவச் சேவை விரைவாகக் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் 58 சிறு மருத்துவமனைகள் அமைத்துக் கொள்ள தமிழக முதல்வா் அனுமதித்துள்ளாா். அவற்றில் இதுவரை 33 மருத்துவமனைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதர சிறு மருத்துவமனைகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். பொதுமக்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக, 10 கா்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நலப் பெட்டகத்தை வழங்கினாா்.
சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் ஏ. மோகன், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் எஸ். தனலட்சுமி, இ. பாகனூா் ஊராட்சித் தலைவா் மு. செங்காயன், சுகாதாரத் துறை, அங்கன்வாடி பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...