திருச்சி
பொதுமக்கள் மனுக்களுக்கு தீா்வு முகாம்
திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் பொதுமக்கள் மனுக்களுக்கு தீா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி: திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் பொதுமக்கள் மனுக்களுக்கு தீா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கன்டோன்மென்ட், பொன்மலை, கோட்டை, ஸ்ரீரங்கம் ஆகிய சரகத்தில் ஆங்காங்கே நடைபெற்ற முகாமில் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டு மனுதாரா்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினா். இதில், 168 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 125 மனுக்கள் மீது முடிவு எட்டப்பட்டு முடித்து வைக்கப்பட்டது என காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
