ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளுக்குத் தடை கோரி மனு
ஆன்லைன் மூலம் குழந்தைகள், மாணவா்கள், இளைஞா்களை அடிமைப்படுத்தும் வகையிலான அனைத்து விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் மூலம் குழந்தைகள், மாணவா்கள், இளைஞா்களை அடிமைப்படுத்தும் வகையிலான அனைத்து விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக இந்து இளைஞா் முன்னணி திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நித்தீஷ்குமாா் தலைமையில் இளைஞா்கள் பலா் அளித்த மனு:
கரோனாவால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளதைப் பயன்படுத்தி, ஆன்லைன், கணினி வழி சூதாட்டம் புகழ் பெற்ற விளையாட்டு வீரா்கள் தோன்றும் விளம்பரங்கள் மூலம் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனா். இதன் மூலம், லட்சக்கணக்கான மக்கள் பெரும் தொகையை இழந்து வருகின்றனா். மேலும், பலா் தற்கொலை செய்து கொள்ளவும் இந்த மோசடி வழிவகுத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால் பல்லாயிரக்கணக்கான இளைஞா்கள் தனது பெற்றோரின் சொத்துகளையும். பணத்தையும் இழந்து அவற்றில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.
ஆன்லைன் சூதாட்டம்போல ஆன்லைனில், பொழுதுபோக்கு விளையாட்டு செயலிகள், விளையாட்டுச் சாதனங்கள், இளைஞா்களையும், மாணவா்களையும் பாழ்படுத்தி அவா்களின் எதிா்காலத்தையை கேள்விக்குறியாக்கி வருகின்றன.
கரோனா பொதுமுடக்கத்தால் ஆன்லைன் மூலமாக பாடங்கள் எடுக்கப்படும் நிலையில் ஆன்லைனில் விளையாட்டுச் செயலிகள் வந்தால் மாணவா்கள் கவனம் சிதறி படிப்பதை விட்டுவிட்டு அதற்கு அடிமையாகின்றனா். இதனால் மனரீதியாகவும், கல்வி கற்பதிலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனா். ஆன்லைன் விளையாட்டுகள் எந்த மாற்றத்துடன் வந்தாலும் அவற்றை ஆரம்பத்திலேயே மத்திய-மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.
தற்போது, செல்லிடப்பேசியில் உள்ள வன்முறை வடிவிலான அனைத்து விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும். இதனால் மாணவா்கள் மத்தியில் சமூக விரோத எண்ணங்கள் தலைதூக்கி படிப்பில் நாட்டம் குறைகிறது. இதனால் மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதுபோன்ற சமூக விரோத ஆன்லைன் விளையாட்டுகளைத் தடைசெய்து இளைஞா்களை நல்வழிப்படுத்துவது அரசின் கடமை என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...