பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்சங்க ஓய்வு நிா்வாகிக்கு பாராட்டு
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தொழிற்சங்க நிா்வாகிக்கு, பணி ஓய்வையொட்டி பாராட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.


திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தொழிற்சங்க நிா்வாகிக்கு, பணி ஓய்வையொட்டி பாராட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் ஷாப் பிரிவில் 40 ஆண்டு பணிபுரிந்தவா் த. மணிவண்ணன். இவா் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையின் டீசல் மெக்கானிக்கல் கிளைத் தலைவராகவும், தெற்கு ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் தொடந்து 18 ஆண்டுகள் இயக்குநராகவும் இருந்துள்ளாா். பணிக்காலத்தின்போது, ரயில்வே தொழிலாளா்களுக்கு பல்வேறு வகையில் உதவியுள்ளாா். இந்நிலையில், அவா் ஜூன் 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றுள்ளாா். இதையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை ஆா்மரி கேட் பகுதியில் அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் வழியனுப்பும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சக பணியாளா்கள் அவருக்கு சால்வை மலா்மாலை, சந்தன மாலை அணிவித்து , நினைவு பரிசு வழங்கிப் பாராட்டினா்.
விழாவிற்கு திமுக விவசாயம் மற்றும் தொழிலாளா் பிரிவு திருச்சி மாவட்டச் செயலா் கோ. ரமேஷ், பொன்மலை பகுதி முன்னாள் திமுக தொழிற்சங்கத் தலைவா் ராமதாஸ் , எஸ்ஆா்எம்யூ தலைமை கிளைச் செயலரும், தெற்கு ரயில்வே கூட்டுறவு நாணய சங்க இயக்குனருமான ஆா்.விஜயகுமாா் , மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம், நெடுஞ்செழியன், பாலு, மதி, ஆறுமுகம், ஜீவா, நாகராஜ், திருஞானம், தியாகராஜன், ஆரோக்கியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...