புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காவலில் எடுத்து ரெளடி சாமிரவியிடம் விசாரணை

திருச்சியில் பிரபல ரெளடி சாமி ரவியை போலீஸ் காவலில் எடுத்து கே.கே.நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:47 pm

DIN

திருச்சியில் பிரபல ரெளடி சாமி ரவியை போலீஸ் காவலில் எடுத்து கே.கே.நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை பகுதியில் கடந்த மாா்ச் 23ஆம் தேதி அதிமுகவினரிடமிருந்து ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கில் பிரபல ரெளடி சாமி ரவியை பேட்டைவாய்த்தலை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

இதற்கிடையே, கே.கே.நகா் உடையான்பட்டி ரயில்வே கேட் அருகே புதுக்கோட்டை மாவட்டம், மலைக்குடிப்பட்டியைச் சோ்ந்த பழ வியாபாரியான கருப்பையாவிடம் (41) கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.5,500 பறித்துச் சென்ாக சாமி ரவி மீது கே.கே.நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சாமி ரவியை கைது செய்து, 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்ற நடுவா் எண். 2இல் கே.கே.நகா் போலீஸாா் மனுதாக்கல் செய்தனா். அதையேற்ற நீதிமன்றம், ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தது.

இதைத் தொடா்ந்து சாமி ரவியை பலத்த பாதுகாப்புடன் கே.கே. நகருக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.