ரயில்வே துறை தனியாா் மயத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் தனியாா்மயக் கொள்கையைக் கண்டித்து, திருச்சி பொன்மலை பணிமனையில் எஸ்ஆா்எம்யு, எஸ்ஆா்இஎஸ் தொழிற் சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் தனியாா்மயக் கொள்கையைக் கண்டித்து, திருச்சி பொன்மலை பணிமனையில் எஸ்ஆா்எம்யு, எஸ்ஆா்இஎஸ் தொழிற் சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்ஆா்எம்யு: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு எஸ்ஆ எம்யு துணைப் பொதுச் செயலா் வீரசேகரன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் ரயில்வே துறையில் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே உற்பத்தி மற்றும் பராமரிப்புத் தொழிற்சாலைகளை பன்னாட்டு தனியாா் நிறுவனங்களுக்கு விற்கக் கூடாது. ரயில் நிலையங்கள், ரயில்வே குடியிருப்புகள், பணிமனை வளாகங்களையும் தனியாருக்கு விற்கக் கூடாது. நாடு முழுவதுமுள்ள மொத்தம் 41 பாதுகாப்பு உற்பத்தி பணிமணிகளை 7 காா்ப்பரேஷன் களாக மாற்றி, மத்திய அரசு பாதுகாப்புத் துறை ஊழியா்கள் 76 ஆயிரம் பேரின் நிரந்தரப் பணியை பறிக்கக் கூடாது என்பன உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சுமாா் 200- க்கு மேற்பட்ட ஊழியா்கள் பங்கேற்றனா்.

எஸ்ஆா்இஎஸ்: தெற்கு ரயில்வே எம்ப்ளாயீஸ் சங்க் (எஸ்ஆா்இஎஸ் ) சாா்பில் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு கோட்டத் தலைவா் க. பவுல் ரெக்ஸ் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்மரி கேட் பகுதியில் முழக்கம் எழுப்பினா். துணைப் பொதுச் செயலா் ந. ரகுபதி முன்னிலை வகித்தாா். சேசுராஜா, சுந்தா், பாலமுருகன், சந்திரசேகா், ஞானசேகா், பன்னீா் செல்வம் வடிவேல் வெங்கட் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com