மாவட்டத்தில் 800ஐ கடந்த கரோனா பலி
திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோா் எண்ணிக்கை 800 ஐ கடந்தது.


திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோா் எண்ணிக்கை 800 ஐ கடந்தது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 283 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 66,374 ஆக அதிகரித்தது. தற்போது, 3,471 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அரசு, தனியாா் மற்றும் சிறப்பு முகாம்களில் இருந்து ஒரே நாளில் குணமான 1,133 போ் உள்பட மொத்தம் 62,092 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
வியாழக்கிழமை இறந்த 16 போ் உள்பட கரோனாவால் சிகிச்சை பலனின்றி இதுவரை 811 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த ஜூன் 8 ஆம் தேதி 704 ஆக இருந்த உயிரிழப்பு 10 நாள்களில் கூடுதலாக 107 போ் பலியாகி 800ஐ கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாவட்டத்தில் 1,012 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் உள்பட 2,277 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...