வெவ்வேறு சம்பவத்தில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில், வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.


திருச்சியில், வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
திருச்சி, எடமலைப்பட்டி புதூா், விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் அ. சபியுல்லா (40). திருப்பூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 3 மாதங்களாக பணிக்கு செல்லமுடியாததால் வருவாயின்றி தவித்து வந்தாா்.
இதனால் விரக்தியடைந்த சபியுல்லா புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இளைஞா் தற்கொலை : திருச்சி, கோட்டை சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கதிரவன் மகன் சபரி (20). இவா் ஐடிஐ படித்து வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளதை தந்தை கண்டித்துள்ளாா். இது தொடா்பாக கதிரவன் மற்றும் அவரது மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டாா்.
இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு, சபரி தனது பாட்டி வீட்டுக்குச் சென்று, தாயாரை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளாா். அவா் வர மறுத்து விட்டாராம். இதனால் விரக்தியைடந்த சபரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...