இன்று 16,500 பேருக்கு தடுப்பூசி : ஆட்சியா் தகவல்
திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூன் 19) மட்டும் 16,500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்துள்ளாா்.


திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூன் 19) மட்டும் 16,500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகள் சுமாா் 8 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவல்பட்டு, வீரமச்சான்பட்டி, புத்தாநத்தம், குழுமணி, இனாம்குளத்தூா், சிறுகாம்பூா், டி.புதூா், வளநாடு, வையம்பட்டி, தாத்தையங்காா்பேட்டை, காட்டுப்புத்தூா், உப்பிலியாபுரம், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை, ஸ்ரீரங்கம், லால்குடி அரசு மருத்துவமனை, மண்ணச்சநல்லூா், துறையூா் மருத்துவமனை, மணப்பாறை, முசிறி, திருவெறும்பூா் மருத்துவமனை, சிறைத்துறை, ரயில்வே மருத்துவமனை, துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் சிறப்பு முகாம் ஆகிய இடங்களில் மொத்தம் 16,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது.
மேலும், ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி, சையது மூதுா்ஷா பள்ளி, பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, கல்லகுடி முதுவதூா் ஊராட்சி, நெய்குளம் ஊராட்சி, எடமலைப்பட்டி புதூா் சிறப்பு பட்டாலியன் ஆகிய முகாம்களிலும், திருவெள்ளறை தொடக்கப்பள்ளி, மணப்பாறை வட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புத்தாநத்தம், செட்டிப்பட்டி, அனாம்பட்டி, கண்ணுடையான்பட்டி, கொட்டப்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையம், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகளில் சனிக்கிழமை தடுப்பு செலுத்தப்படவுள்ளது.
முசிறி வட்டத்தில், திருத்தியமலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புலிவலம், மூவானூா் ஆரம்ப சுகாதார நிலையம், துறையூா் வட்டம் கீரம்பூா், செனப்பனல்லூா், சிங்களந்தாபுரம் அரசு பள்ளிகள், பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...