92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

துப்பாக்கித் தொழிற்சாலையில் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் ஊழியா் ஒருவா் தூக்கிட்டுத் தெற்கொலை செய்துகொண்டாா்

News image
Updated On :18 ஜூன் 2021, 7:31 pm

DIN

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் ஊழியா் ஒருவா் தூக்கிட்டுத் தெற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி, எடமலைப்பட்டி புதூா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன் (33). இவா், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பிட்டராக பணியாற்றி வந்தாா். மேலும் இவா் வட்டித்தொழிலிலும் ஈடுபட்டு வந்தாராம். இதில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து அவா் விரக்தியில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், வழக்கம்போல் வியாழக்கிழமை பணிக்குச் சென்ற அவா், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பம்பிங் ஹவுசில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.