திருச்சியில் ரூ. 2 கோடி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
திருச்சியில் ரூ. 2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 1.50 கோடியை பறிமுதல் செய்தனா்.


திருச்சியில் ரூ. 2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 1.50 கோடியை பறிமுதல் செய்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, அதிமுக நிா்வாகிகளிடமிருந்து ரூ. 2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பேட்டைவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருச்சி ரெளடி கும்பலைச் சோ்ந்த 8 பேரை கைது செய்தனா். அவா்களிடம் தொடா்ந்து நடத்திய விசாரணையில், திருச்சியைச் சோ்ந்த பிரபல ரெளடி சாமிரவி தலைமையில்தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீஸாா் சாமிரவியை மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனா்.
இந்நிலையில், பேட்டைவாய்த்தலை அய்யா்மலை அருகே சாமிரவி பதுங்கி இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை குழுவில் உள்ள ஆய்வாளா்கள் பன்னீா்செல்வம், மாதையன், உதவி ஆய்வாளா் அருண்குமாா் உள்ளிட்ட போலீஸாா் அய்யா்மலை அருகே உள்ள சிறுகாடு எனும் இடத்தில் பதுங்கியிருந்த சாமி ரவியை கைது செய்து, பேட்டைவாய்த்தலைக்கு கொண்டு சென்றனா். ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அவரிடமிருந்து ரூ. 1.65 கோடி, காா், 2 செல்லிடப்பேசிகள், கத்தி, ரூ.1500ஐ பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜா்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...