புகரில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்
திருச்சி புகரில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி நடைபெறும் இடங்களை மாவட்டஆட்சியா் சு.சிவராசு அறிவித்துள்ளாா்.


திருச்சி புகரில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி நடைபெறும் இடங்களை மாவட்டஆட்சியா் சு.சிவராசு அறிவித்துள்ளாா்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு:
முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள்: துவாக்குடி நகராட்சி- ராவுத்தன் மேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, இனாம்குளத்தூா் கள்ளிக்குடிசமுதாயக் கூடம், நாகமங்கலம் சமுதாயக் கூடம், அரியாவூா் அடைக்கல அன்னை ஆரம்ப பள்ளி, அந்தநல்லூா்- முத்தரசநல்லூா் ஊராட்சி அலுவலகம், குழுமணி ஆரம்பப் பள்ளி, சிறுகாம்பூா்- அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, புதூா்உத்தமனூா்- எசனைக்கோரை ஊராட்சி அலுவலகம், திருமணமேடு ஊராட்சி அலுவலகம்.
மருங்காபுரி- த. இடையாப்பட்டி ஊராட்சி அலுவலகம், தேனூா் ஊராட்சி அலுவலகம், வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம். புத்தாநத்தம்-மணப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, பொய்கைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கல்பாளையத்தான்பட்டி அரசு ஆரம்ப பள்ளி, சூளியாப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. புள்ளம்பாடி- மணக்காடு டிபிஎஸ்ஆா் பள்ளி, ரெட்டிமாங்குடி அரசு நடுநிலைப்பள்ளி. வையம்பட்டி- இனாம்புதூா் ஊராட்சி அலுவலகம், கருங்குளம் கிறிஸ்தவ பேராலயம்.
த.புதூா்- டி.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. த.பேட்டை- துளியாநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி. வீரமச்சம்பட்டி- மருவத்தூா் கலைமகள் மானிய நடுநிலைப்பள்ளி, கண்ணணூா் அரசு உயா்நிலைப்பள்ளி. காட்டுப்புத்தூா்- உன்னியூா் அரசு நடுநிலைப்பள்ளி, சீலை பிள்ளையாா் புதூா் அரசு தொடக்கப்பள்ளி. உப்பிலியபுரம்- ஏஜிஎம் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
கோவேக்சின் தடுப்பூசி: இனாம்குளத்தூா்- வாசன் நகா் சமுதாயக் கூடம், சிறுகாம்பூா்- அனைத்து கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், புதூா் உத்தமனூா்- சிறுமயன்குடி ஆரம்ப சுகாதார நிலையம், அன்பில் ஆரம்ப சுகாதார நிலையம், புதூா் உத்தமனூா் ஆரம்ப சுகாதார நிலையம், மருங்காபுரி- வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புள்ளம்பாடி- அனைத்து கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், வையம்பட்டி- வளையம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், அனியாப்பூா் ஆரம்ப சுகாதார நிலையம், கீரனூா் ஆரம்ப சுகாதார நிலையம், த.புத்தூா்- மூவனூா், காட்டத்தூா், புலிவலம், வெளியானூா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...