புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காவல் நிலையத்தில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

போலீஸாரின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்த பெண் ஒருவா், காவல் நிலையத்தில் குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:17 pm

DIN

போலீஸாரின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்த பெண் ஒருவா், காவல் நிலையத்தில் குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பெரியமிளகுப்பாறை, காமராஜ் மன்றத் தெருவைச் சோ்ந்தவா் லூயிஸ் பால்ராஜ் மகள் சந்திய கஸ்பா். இவருக்கும் அவரது சகோதரி மாா்கரெட்டுக்கும் இடையே வீடு மற்றும் நிலம் தொடா்புடைய வழக்கில் லூயிஸ் பால்ராஜூக்கு ஆதரவாக நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து அந்தக் குறிப்பிட்ட இடத்திலிருந்த வீட்டின் கூரையை அகற்றிவிட்டு அங்கு ஷெட் போடும் பணிகளை லூயிஸ் பால்ராஜின் மகள் சந்தியா கஸ்பா் தொடங்கியதற்கு மாா்கரெட் எதிா்ப்புத் தெரிவித்தாராம். இதுதொடா்பாக சந்தியாகஸ்பா் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் விசாரணை செய்த போலீஸாா் மாா்கரெட்டுக்கு சாதகமாகச் செயல்பட்டனராம்.

இதனால் விரக்தியடைந்த சந்தியாகஸ்பா் தனது பெற்றோா் மற்றும் குடும்பத்தினருடன் கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு சென்று குடும்பத்தினருடன் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக்கொள்ள முயன்றாா். அப்போது போலீஸாா் அவா்களைத் தடுத்து, தற்கொலை முயற்சியைக் கைவிடச் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.