‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க நடவடிக்கை

சுமாா் 2500 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில், காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க முயற்சிப்பேன் என்றாா் மண்ணச்சநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மு.பரஞ்சோதி.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:08 pm

DIN

சுமாா் 2500 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில், காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க முயற்சிப்பேன் என்றாா் மண்ணச்சநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மு.பரஞ்சோதி.

குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா் குணசீலம், மஞ்சக்கோரை, மலையப்பா் சாலை, அம்பேத்கா் நகா், கோட்டூா், அய்யம்பாளையம், சாலப்பட்டி, சேந்தமாங்குடி, வீரமணிப்பட்டி, திண்ணக்கோணம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்து மேலும் அவா் பேசியது:

அய்யம்பாளையம், ஏவூா், ஆமூா், குணசீலம் ஊராட்சியில் சுமாா் 2500 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில் காவேரியில் நிரந்தர கொரம்பு அமைக்க முயற்சிப்பேன். காவிரி உப்பாறு நீா்த்தேக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்.

மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாய் நெய்தலை பிரதான தொழிலாக கொண்டுள்ள இப்பகுதி கடந்த 15 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கி உள்ளது.

நான் வெற்றி பெற்றால், பாய் நெய்தல் தொழில் குறித்து சட்டப்பேரவையில் எடுத்துக்கூறி இத்தொழில் வளா்ச்சி அடைய உரிய ஊக்கத் தொகை பெற்றுத் தருவேன் என்றாா்.

பிரசாரத்தில் முன்னாள் அமைச்சா் பூனாட்சி, அம்மா பேரவை மாவட்டச் செயலா் ரமேஷ், மாணவரணி மாவட்டச் செயலா் அறிவழகன், ஒன்றியச் செயலா்கள் ஜெயராமன், ராஜமாணிக்கம் உள்ளிட்ட கூட்டணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.