‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் அரசு

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதில், அதிமுக அரசு முக்கிய பங்கு வகிக்கிறது என்றாா் திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:11 pm

DIN

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதில், அதிமுக அரசு முக்கிய பங்கு வகிக்கிறது என்றாா் திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன்.

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவா், பிரதான வீதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடி வாக்கு சேகரித்து பேசியது:

திமுக ஆட்சிக்காலத்தில் மின் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. ஆனால் அதிமுக அரசு பதவியேற்ற பின்னா், இந்தியாவில் உபரி மின்சாரம் செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மின்மிகை மாநிலமாகத் தமிழகம் தொடா்ந்து இருப்பதால், உலகிலுள்ள பெரு நிறுவனங்கள் தமிழகத்தைத் தோ்ந்தெடுத்து தொழில் தொடங்கமுன்வந்துள்ளன.

உலக முதலீட்டாளா் மாநாட்டை நடத்தியதன் மூலம், 304 தொழிற்சாலைகள் அமைக்க இதுவரை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து சலுகைகளும் கேட்காமலேயே வழங்கப்படுவதால், மூன்றாவது முறையாக மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தின்போது அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஐயப்பன், துணைத் தலைவா் ஜாக்குலின், பகுதிச் செயலா்கள் சுரேஷ் குப்தா, அன்பழகன் மற்றும்ஜவஹா்லால் நேரு மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.