

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 92,645 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக-வுக்கு 2ஆவது இடமும், நாம் தமிழர் 3ஆவது இடம், மநீம 4, அமமுக 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளன.
திருச்சி கிழக்கு சட்டப் பேரவை தொகுதியில் திமுக சார்பில், கிறிஸ்தவ நல்லெண்ணெ இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டார்.
அதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், மநீம சார்பில் டி. வீரசக்தி, அமமுக சார்பில் முன்னாள் அரசு கொறடா ஆர். மனோகரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா. பிரபு உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 28 சுற்றுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 92 ஆயிரத்து 645 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றார்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை 52 ஆயிரத்து 536 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்து இந்த வெற்றியை பிடித்துள்ளார். அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் 40,109 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இரா. பிரபு, 14,211 வாக்குகள் பெற்று 3ஆது இடமும், மநீம வேட்பாளர் டி. வீரசக்தி 11,309 வாக்குகள் பெற்று 4ஆவது இடமும் பிடித்தனர்.
அமமுக வேட்பாளர் 9,010 வாக்குகள் பெற்று 5ஆவது இடம் பிடித்தார். நோட்டாவுக்கு 1,504 வாக்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.